கூலித்தொழிலாளி வீட்டில் 2 பெட்ரோல் குண்டு வீச்சு...! ஈரோட்டில் பரபரப்பு

கோபி அருகே கூலி தொழிலாளி வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூலித்தொழிலாளி வீட்டில் 2 பெட்ரோல் குண்டு வீச்சு...! ஈரோட்டில் பரபரப்பு
Published on

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது47). கூலி வேலை செய்து வருகிறார். சண்முகம் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது யாரோ சில மர்ம நபர்கள் இன்று காலை 5 மணி அளவில் 2 பெட்ரோல் குண்டை வீட்டின் முன்பு வீசி விட்டு சென்று விட்டனர். இதில் ஒரு பெட்ரோல் வெடிகுண்டு தீப்பிடித்து எரிந்தது. மற்றொன்று வெடிக்க வில்லை. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் மற்றும் ஈரோடு குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நீலகண்டன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

முன் விரோதம் காரணமாக யாராவது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனரா அல்லது வேறு காரணமா என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com