போக்சோ வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாறைகுளத்தைச் சேர்ந்த பாலமுருகன், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம் கஸ்பாவை சேர்ந்த செல்வராஜ் ஆகிய 2 பேரும் போக்சோ வழக்கில் குற்றவாளிகள் ஆவர்.
போக்சோ வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், பாறைகுளத்தைச் சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் பாலமுருகன் (வயது 33) மற்றும் விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம் கஸ்பாவை சேர்ந்த சுடலைமுத்து மகன் செல்வராஜ்(73) ஆகிய 2 பேரும் போக்சோ வழக்கில் குற்றவாளிகள் ஆவர். இவர்கள் 2 பேர் மீதும் ஊரக அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், அம்பாசமுத்திரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன் பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் இன்று பாலமுருகன், செல்வராஜ் ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com