நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறிப்பு

மூதாட்டியிடம் 2 பவுன் நகையை பறித்துச்சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறிப்பு
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 65). இவர், நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் மூதாட்டியை பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் திடீரென்று மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த வாலிபர், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டார். அப்போது மூதாட்டி திருடன், திருடன் என்று கூச்சலிட்டார்.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் 2 பேரும் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று தலைமறைவாயினர். இதுகுறித்து ஜெயலட்சுமி அன்னதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் 2 பவுன் சங் கிலியை பறித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர். சங்கிலி பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com