திருச்செந்தூர் - நெல்லை இடையே ஓடும் அரசு பஸ்சில் 2 பதிவெண்கள்: வைரலான வீடியோ

2 பதிவெண்கள் இருப்பது குறித்து பயணிகள் மத்தியில் சந்தேகமும், குழப்பமும் ஏற்பட்டது.
திருச்செந்தூர் - நெல்லை இடையே ஓடும் அரசு பஸ்சில் 2 பதிவெண்கள்: வைரலான வீடியோ
Published on: 

திருச்செந்தூர்,

திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பஸ்சில் 2 வெவ்வேறு பதிவெண்கள் இடம்பெற்றிருந்ததால் பயணிகள் குழப்பம் அடைந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பஸ், ‘வெற்றிப்பயணம்’ என குறிப்பிடப்படும் நிலையில் இயக்கப்பட்டு வந்தது. அந்த பஸ்சில் முன்புறம் மற்றும் பின்புறம் வெவ்வேறு பதிவெண்கள் இருப்பது பயணிகளின் கவனத்திற்கு வந்தது.

2 பதிவெண்கள்

ஒரே அரசு பஸ்சில் 2 பதிவெண்கள் இருப்பது குறித்து பயணிகள் மத்தியில் சந்தேகமும், குழப்பமும் ஏற்பட்டது. இதனை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அதிகாரிகள், பஸ்சில் இடம்பெற்றுள்ள பதிவெண் தொடர்பான பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

மேலும், இன்று இரவே பஸ்சில் உள்ள பதிவெண் தொடர்பான பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com