2 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்

2 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்
2 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்
Published on

பட்டுக்கோட்டை அருகே 2 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

கூரை வீடுகள் சாம்பல்

பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் பைபாஸ் சாலை ரவுண்டானா அருகே செல்லபாண்டியன் (வயது 40), அழகு பாண்டியன் (35) ஆகியோர் கூரை வீடுகளில் தனி தனியாக வசித்து வருகின்றனர். நேற்று பகல் 12 மணி அளவில் திடீரென 2 பேரின் வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com