திருக்கோவிலூர் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

திருக்கோவிலூர் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனா. மேலம் 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருக்கோவிலூர் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
Published on

திருக்கோவிலூர்,

மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் திருக்கோவிலூர் அருகே செம்படை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தென்பெண்ணையாற்றங்கரையோரம் மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகளை போலீசார் மறித்தனர். போலீசாரை பார்த்ததும் அதனை ஓட்டிவந்தவர்கள், மாட்டுவண்டிகளை சாலையிலேயே விட்டு விட்டு தப்பி ஓடினர். உடனே போலீசார் விரட்டிச்சென்று 2 பேரை மட்டும் மடக்கிப்பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பூவரசன்(வயது 22), ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் மகன் ராமசாமி(30) ஆகியோர் என்பதும், தப்பி ஓடியவர்கள் வேடியப்பன்(30), ஏழுமலை மகன் தணிகைவேல்(28), கோவிந்தன் மகன் பிரகாஷ்(22) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பூவரசன், ராமசாமி ஆகியோரை கைது செய்த போலீசார் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 5 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com