பெண்ணை கொலை செய்து புதைத்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை


பெண்ணை கொலை செய்து புதைத்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x

குலசேகரன்பட்டினம் பகுதியில் வைத்து வாழவல்லான் கொற்கைரோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்து புதைக்கப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வைத்து, கடந்த 2014ம் ஆண்டு வாழவல்லான் கொற்கைரோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்து புதைக்கப்பட்டார். இந்த வழக்கில் முத்துகிருஷ்ணாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த தனராஜ் மகன் சோமு(எ) சோமசுந்தரம் (வயது 45) மற்றும் மாநாடு தைக்காவூர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் அருண்குமார்(35) ஆகிய 2 பேரை குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா இன்று குற்றவாளிகளான சோமு(எ) சோமசுந்தரம் மற்றும் அருண்குமார் ஆகிய 2 பேருக்கும் தலா ஆயுள் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய குலசேகரன்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு முருகன் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பாராட்டினார்.

1 More update

Next Story