நெல்லையில் பாலியல் குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையைச் சேர்ந்த 2 பேர், குழந்தைகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய இரண்டு வேறு வழக்குகளில் தொடர்புடைய பாலியல் குற்றவாளிகள் ஆவர்.
நெல்லையில் பாலியல் குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on: 

நெல்லை,

நெல்லை மாநகரில் குழந்தைகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய இரண்டு வேறு வழக்குகளில் தொடர்புடைய பாலியல் குற்றவாளிகள் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் குற்றவாளிகள்

திருநெல்வேலி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த செல்வகுமார் மகன் சாம்ராஜ் (வயது 20), அருள்ராஜ் மகன் பாஸ்கர்(50) ஆகிய 2 பேரும் நெல்லை மாநகரில் குழந்தைகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி, அதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மனதில் பாலியல் தாக்குதல் குறித்த பீதியையும், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த, இரண்டு வெவ்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட "பாலியல் குற்றவாளிகள்" ஆவர்.

2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மேற்சொன்ன 2 பேரும் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி இன்று (3.10.2026) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com