புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்

திருமருகல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்:தலா ரூ.5 ஆயிரம் அபராதம்
புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்
Published on

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில், திருக்கண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆண்டனி பிரபு ஆகியோர் திருமருகலை அடுத்த அண்ணாமண்டபம், மேலப்போலகம் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மேலப்போலகம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் மகன் வீரமணி (வயது 30) மற்றும் அண்ணா மண்டபம் பகுதியை சேர்ந்த விஜய் (45) ஆகியோரின் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரி, புகையிலை பொருட்களை விற்பனை செய்த அந்த 2 கடைகளுக்கும் சீல் வைத்தார். மேலும் அந்த கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com