சொத்து பிரச்சினை: கிணற்றில் குதித்து அக்காள் - தங்கை தற்கொலை

சரோஜாவும், இந்திராவும் ஒரே குடும்பத்தில் அண்ணன் - தம்பியை திருமணம் செய்துள்ளனர்.
சொத்து பிரச்சினை: கிணற்றில் குதித்து அக்காள் - தங்கை தற்கொலை
Published on

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சாம்பவர்வடகரை கீழுர் பொய்கை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் மனைவி சரோஜா (வயது 62). வைத்தியலிங்கத்தின் உடன் பிறந்த சகோதரர் பரமசிவம். அவருடைய மனைவி இந்திரா (49).

சரோஜாவும், இந்திராவும் அக்காள்-தங்கை ஆவர். இவர்கள் ஒரே குடும்பத்தில் அண்ணன்-தம்பியை திருமணம் செய்து கூட்டு குடும்பமாக பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். ஆனால், இரு குடும்பங்களுக்கு இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இரு குடும்பங்களும் பிரிந்து தனித்தனியே வசித்து வந்தனர்.

இந்நிலையில், அக்காள்-தங்கையான சரோஜாவும், இந்திராவும் நேற்று முன் தினம் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒன்றாக இருந்த குடும்பம் தற்போது சொத்து பிரச்சினையால் தற்போது பிரிந்து கிடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தங்கள் சாவிலாவது குடும்பத்தினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என்று இந்த விபரீத முடிவு எடுத்துள்ளனர்.

சம்பவத்தன்று இருவரும் தங்கள் வீடுகளில் இருந்து ஒன்றாக வெளியேறி தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com