பள்ளி விடுதியில் சாப்பிட்ட 2 மாணவிகள் மயக்கம்

பள்ளி விடுதியில் சாப்பிட்ட 2 மாணவிகள் மயக்கமடைந்தனர்.
பள்ளி விடுதியில் சாப்பிட்ட 2 மாணவிகள் மயக்கம்
Published on

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் தங்குவதற்கு விடுதிகளும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மாணவிகளுக்கான விடுதியில் சாப்பிட்ட 2 மாணவிகள், திடீரென வாந்தி எடுத்து மயங்கினர். இதையடுத்து அந்த மாணவிகளை உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com