

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தில் முனியன் என்பவரது வீட்டை சீரமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்த பணியின்போது எதிர்பாராத வகையில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இந்நிலையில், இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளில் சிக்கி முகேஷ் மற்றும் அபினேஷ் ஆகிய 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 வயது சிறுவன் ஸ்ரீராம் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.