2 கோவில்களில் திருட்டு

பாவூர்சத்திரம் அருகே 2 கோவில்களில் திருட்டு நடந்தது.
2 கோவில்களில் திருட்டு
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே நெல்லை- தென்காசி நான்கு வழி சாலையில் அமைந்துள்ள நவநீத கிருஷ்ணபுரத்தில் முப்புடாதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள், மின்சார அறையில் மின் இணைப்பை துண்டித்துள்ளனர். பின்னர் கோவிலில் உள்ள உண்டியலை உடைக்க முயற்சி செய்துள்ளனர். மெயின் ரோடு என்பதால் அந்த வழியாக வந்தவர்கள் சத்தம் போடவும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் டி.வி.ஆர். மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டரை திருடிவிட்டு தப்பிச் சென்றனர்.

மேலும் அதே பகுதியில் பூபாலசமுத்திரத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றனர். தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com