அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்

நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
Published on

நீடாமங்கலம்:

அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு அரவைக்காக ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிமாவட்டங்களில் உள்ள ஆலைகளுக்கு நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக நீடாமங்கலம்,மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசுநேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து 153 லாரிகளில் நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 41 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் தர்மபுரிக்கு புறப்பட்டு சென்றது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com