காரில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தக்கலை அருகே காரில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

தக்கலை, 

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு காரில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் மற்றும் அதிகாரிகள் சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரை துரத்தி சென்றனர்.

தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி பகுதியில் சென்ற போது டிரைவர் காரை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து அதிகாரிகள் காரை சோதனை செய்த போது 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உடையார்விளை அரசு குடோனில் ஒப்படைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com