சேலம் வழியாக இயக்கப்படும் 2 ரெயில்கள் ரத்து

சேலம் வழியாக இயக்கப்படும் 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சேலம் வழியாக இயக்கப்படும் 2 ரெயில்கள் ரத்து
Published on

சூரமங்கலம், 

கிழக்கு கடற்கரை ரெயில்வே சாம்பல்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட தியோபஹால் பர்கார் இடையே இருவழி பாதைகளில் பொறியியல் பணிகள் நடக்கிறது. இதையொட்டி சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் போத்தனூர் வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து புறப்படும் டாட்டா நகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (18189) நாளை மற்றும் வருகிற 29-ந் தேதி ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் செல்லும் எர்ணாகுளம்- டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரயில் (18190) நாளை மற்றும் வருகிற 28-ந் தேதி ஆகிய ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com