சென்னையில் பெண்ணிடம் பணம் பறித்த 2 திருநங்கைகள், ஆட்டோ டிரைவர் கைது

சென்னை அரும்பாக்கம் என்.எஸ்.கே.நகர் பேருந்து நிறுத்தத்தில் பெண் ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தபோது, அங்கு ஆட்டோவில் வந்து இறங்கிய 2 திருநங்கைகள் அந்த பெண்ணிடம் பணம் கேட்டனர்.
சென்னையில் பெண்ணிடம் பணம் பறித்த 2 திருநங்கைகள், ஆட்டோ டிரைவர் கைது
Published on

சென்னை,

சென்னை மேற்கு முகப்பேரை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி (வயது 36). நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம், என்.எஸ்.கே.நகர் பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்து இறங்கிய 2 திருநங்கைகள் சாமுண்டீஸ்வரியிடம் பணம் கேட்டனர்.

அவர் பையில் இருந்த மணிபர்சை திறந்தபோது ஒரு திருநங்கை. மணிபர்சில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்துக்கொண்டு ஆசீர்வாதம் செய்வது போல் நடித்து, அதில் ரூ.500-ஐ எடுத்துக்கொண்டு பர்ஸை கொடுத்ததாகவும், அந்த பணத்தை கேட்ட சாமுண்டீஸ்வரியை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சாமுண்டீஸ்வரி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து திருங்நங்கைகள் மற்றும் ஆட்டோவை ஓட்டி வந்த நபர் என 3 பேரையும் மடக்கிப்பிடித்து அமைந்தகரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் பிடிபட்டவர்கள் அண்ணாநகரை சேர்ந்த திருநங்கைகளான விந்தியா(23), வனிதா(19) மற்றும் ஆட்டோ டிரைவர் சதீஷ்(24) என்பது தெரிந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com