வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது; 25 கிலோ கஞ்சா பறிமுதல்...!

நாகமலை புதுக்கோட்டை அருகே 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பெண்களை கைது செய்துள்ளனர்.
வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது; 25 கிலோ கஞ்சா பறிமுதல்...!
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே கீழமாத்தூரில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது கீழமாத்தூர் போஸ் மனைவி ராணி(வயது 42) என்பவர் வீட்டை சோதனையிட்ட போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது.

அந்த வீட்டிலிருந்து 25 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றிய தனிப்படை போலீசார் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ரத்தினம் மனைவி வசந்தா(வயது 50), வீட்டின் உரிமையாளர் ராணி ஆகியோரைப் பிடித்து நாகமலை புதுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இருவரையும் கைது செய்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, வசந்தாவின் கணவர் ரத்தினத்தைத் தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com