சென்னையில் மழைநீர் சேகரிப்பு தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னையில் மழைநீர் சேகரிப்பு தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
Published on: 

சென்னை,

சென்னை கொடுங்கையூரில் மழைநீர் சேகரிப்பு குழியை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. சுமார் 15 அடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்பு குழியை சுத்தம் செய்யும் பணியில் தற்காலிக பணி அடிப்படையிலான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், சுத்தம் செய்யும் பணியின்போது திடீரென விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com