கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி

பெருங்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளிகள் பலியானார்கள்.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி
Published on

சென்னையை அடுத்த பெருங்குடி காமராஜர் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 15 நீளம், 15 அடி அகலம், 20 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த கழிவுநீர் தொட்டியில் இறங்கி பள்ளிக்கரணையை சேர்ந்த பெரியசாமி (வயது 38), தட்சணாமூர்த்தி (38) ஆகியோர் சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது விஷவாயு திடீரென தாக்கியதில் இருவரும் மயக்கம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இவர்களது சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து கழிவுநீர் தொட்டியில் மயங்கி இருந்த இருவரையும் மீட்டனர்.

இதில் தொழிலாளி பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் விஷவாயு தாக்கி உயிருக்கு போராடிய தட்சணாமூர்த்தியை மீட்டு, பெருங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேரின் சாவு குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com