

நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட 2 வயது பெண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.
நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி-சினேகா தம்பதியின் 2 வயது மகள் மகாலட்சுமிக்கு கடந்த 5 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.
தனியார் ஆஸ்பத்திரியில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கே குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.