சென்னையில் காவல் நிலையம் முன்பு ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த 2 வாலிபர்கள் கைது


சென்னையில் காவல் நிலையம் முன்பு ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த 2 வாலிபர்கள் கைது
x

சென்னையில் காவல் நிலையம் முன்பு ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை கே.கே. நகர் பி.டி.ராஜன் சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்தும், கே.கே.நகர் காவல் நிலையம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஆபாசமான வார்த்தைகளுடன் ‘ரீல்ஸ்' எடுத்து 2 வாலிபர்கள் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் பாபிஜோஸ் என்பவரையும் 2 பேரும் சேர்ந்து மிரட்டி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாபிஜோஸ் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் கே.கே.நகரை சேர்ந்த ஆகாஷ் (21), கோகுல் (22) ஆகிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சாகசம் செய்த மோட்டார் சைக்கிளையும், அவர்கள் 2 பேரின் செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story