கோவில்பட்டியில் அரிவாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது

கோவில்பட்டி, நடராஜபுரம் மயானம் அருகே நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
கோவில்பட்டியில் அரிவாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் தலைமையில் போலீசார் நடராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடராஜபுரம் மயானம் அருகே நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் பிடித்து சோதனையிட்டபோது அவர்கள் முதுகில் சட்டையில் அரிவாள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் நடராஜபுரம் 5வது தெருவைச் சேர்ந்த சின்னப்பாண்டி மகன் கார்த்திக்(எ) கோழிகார்த்திக் (வயது 21), காந்திநகர் பாலன் தெருவைச் சேர்ந்த ஆறுமுகபாண்டியன் மகன் சூரியகுமார்(23) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேர் மீதும் கோவில்பட்டி கிழக்கு, மேற்கு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்த அரிவாள்களை பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com