

புதுச்சேரி 45 அடி சாலையில் உள்ள தனியார் திருமண நிலையம் அருகே 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக பெரியகடை போலீசுக்கு தகவல் வந்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்றவர்களை பிடித்து விசாரித்ததில் சித்தன்குடி முதலாவது குறுக்குத்தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் யுவராஜ் (வயது22), விக்கிரவாண்டி காமாட்சி நகரை சேர்ந்த நாகப்பன் என்பவரின் மகன் கமல்ராஜ் (22) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.