தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: மோட்டார் சைக்கிள் பறிமுதல்


தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: மோட்டார் சைக்கிள் பறிமுதல்
x

தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார், காவல் சரக பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் காவல் சரக பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தாளமுத்து நகர்-ராஜபாளையம் இடையே உள்ள மாதா கோவில் அருகே வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிலுவைபட்டி சுனாமி காலனியை சேர்ந்த ஜோஸ்வா (வயது 22), சஞ்சய்(23) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story