தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: இருசக்கர வாகனம் பறிமுதல்

தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் மேல அழகாபுரி பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: இருசக்கர வாகனம் பறிமுதல்
Published on

தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் மேல அழகாபுரி பேருந்து நிறுத்தம் அருகே ரேந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பேது பேலீசாரைக் கண்டதும் தப்பியேட முயன்ற 2 வாலிபர்களை பிடித்து சேதனை செய்தபேது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் சிலுவைப்பட்டி, சுனாமி காலனியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் மகன் அந்தேணிராஜ் (வயது 19), மேற்கு சுனாமி காலனியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் சுப்பிரமணியன்(18) எனத் தெரியவந்தது. இதுகுறித்து பேலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com