இரும்பு பொருட்களை திருடிய 2 வாலிபர்கள் கைது

இரும்பு பொருட்களை திருடிய 2 வாலிபர்கள் கைது
இரும்பு பொருட்களை திருடிய 2 வாலிபர்கள் கைது
Published on

ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் கட்டுமான பணிக்கு தேவையான இரும்பு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதில் 6 இரும்பு பட்டைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து நிறுவனத்தின் என்ஜினீயர் ஜோதிநாதன் (வயது 31) ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இரும்பு பொருட்களை திருடியவர்கள் ஈரோடு சூளை பாண்டியன் நகர் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் கலையரசன் (21), ஈ.பி.பி. நகர் ஜனதா காலனியை சேர்ந்த ராஜூ என்பவரின் மகன் சந்தோஷ் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட இரும்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com