கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார்.
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த சீனி முகம்மது நியாஸ் (வயது 19) மற்றும் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சந்தோஷ்குமார்(19) ஆகிய 2 பேர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் மேற்சொன்ன 2 வாலிபர்களை நேற்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com