பொதுமக்களை மிரட்டுதல் வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகர பகுதியில் 2 வாலிபர்கள் பொதுமக்களை மிரட்டுதல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி,

நெல்லையில் பொதுமக்களை மிரட்டுதல் வழக்குகளில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களை மிரட்டுதல் வழக்கு:

திருநெல்வேலி மாநகரம், குறிச்சியைச் சேர்ந்த சண்முகம் மகன் சின்னத்துரை (வயது 23), கீழமுன்னீர்பள்ளத்தை சேர்ந்த மாரி மகன் சக்திவேல்(20) ஆகிய 2 பேர், நெல்லை மாநகர பகுதியில் பொதுமக்களை மிரட்டுதல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.

2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது:

இதை தொடர்ந்து திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று சின்னத்துரை, சக்திவேல் ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com