கொள்ளை வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

பணகுடி பகுதியில் 2 வாலிபர்கள் கொள்ளை வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி வட்ட போலீசார் கவனத்திற்கு வந்தது.
கொள்ளை வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட நாங்குநேரியைச் சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் கல்யாணி (வயது 19) மற்றும் மதுரை மாவட்டம், சிந்தாமணியை (மெயின் ரோடு) சேர்ந்த சரவணக்குமார் மகன் சூரியா(எ) தினேஷ்குமார்(எ) தினேஸ்வரன்(25) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் 2 பேரும் கொள்ளை வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் கவனத்திற்கு வந்தது. அவர் கல்யாணி, சூரியா ஆகிய 2 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் அவர்கள் 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று (8.6.2025) அடைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com