ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி
x

இளைஞர்கள் விளையாட்டு போக்கில் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர்.

ஒகேனக்கல்,

கோடைகாலம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றும் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 20 இளைஞர்கள் ஒரு சுற்றுலா வாகனத்தில் இன்று ஒகேனக்கல்லுக்கு வந்தனர். காலையில் அப்பகுதியை சுற்றி பார்த்துவிட்டு பின்னர் ஆற்றில் குளிக்கலாம் என முடிவு செய்தனர்.

ஒகேனக்கல்லில் அதிக சுழல் உள்ள பகுதியான சேமலை தோட்டம் பகுதியில் குளித்துள்ளனர். அப்போது அதில் இருவர் விளையாட்டு போக்கில் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். இதனால் சுழலில் சிக்கிக்கொண்டனர்.

இந்த நிலையில் நீரில் மூழ்கி தனசேகரன் மற்றும் ரவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினரும், ஒகேனக்கல் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுழலில் சிக்கிய இளைஞர்களின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story