மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி

2 youths killed after motorcycle crashes into tree
மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி
Published on

திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியாகினர்.

மரத்தில் மோதியது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே புளியம்பட்டை ஒத்ததெருவை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் அவினாஷ் (வயது 26). செட்டிமண்டபம் வடக்கு தெருவை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் கணேஷ் (23). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை ஒரு மோட்டார் சைக்கிளில் திருநீலக்குடியில் இருந்து கும்பகோணம் நோக்கி அந்தமங்கலம் வழியாக சென்றனர். ப்போது அந்தமங்கலத்தில் சாலை வளைவில் திரும்பியபோது, தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் இருந்த தோப்புக்குள் புகுந்து தேக்கு மரத்தில் மோதியது.

2 வாலிபர்கள் பலி

இதில் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்த அவினாஷ், கணேஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் 2 பேர் பிணமாக கிடப்பதை கண்டு திருநீலக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com