2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, மணிவிழுந்தான் அருகே ஏட்டுக்காட்டை சேர்ந்த மாதேஸ்வரனின் மகன் ஜீவா என்ற ஆனந்தராஜை (வயது 27) நாட்டு சாராயம் விற்ற வழக்கில் பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா, தேவையூரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் கள்ளக்குறிச்சி சிவன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணனின் மகன் சிவா (28) மங்களமேடு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஆனந்தராஜ், சிவா ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று ஆனந்தராஜ், சிவா ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான நகலினை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com