பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது

நெல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது
Published on

நெல்லை கொக்கிரகுளம் குருந்துடையார்புரம் பகுதியில் நெல்லை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மற்றும் போலீசார் ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சோதனை செய்தபோது அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மேலப்பாளையம் போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது மேலப்பாளையத்தை சேர்ந்த குமரேசன் (வயது 19), கொக்கிரகுளத்தை சேர்ந்த மகாராஜன் (19) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com