சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Nov 2024 11:50 AM IST (Updated: 26 Nov 2024 3:33 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

3 விமானங்களில் கடத்திவரப்பட்ட இந்த தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 25 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கைதானவர்களிடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story