ரூ.20 லட்சத்தில் குடிநீர் திட்டப்பணி

வடக்கு பனவடலிசத்திரத்தில் ரூ.20 லட்சத்தில் குடிநீர் திட்ட பணிகளை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ரூ.20 லட்சத்தில் குடிநீர் திட்டப்பணி
Published on

பனவடலிசத்திரம்:

வடக்கு பனவடலிசத்திரத்துக்கு சீராக குடிநீர் வழங்கும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு மற்றும் மின் மேட்டார் அமைக்கும் பணி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, குடிநீர் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், வடக்குபனவடலி ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி, அவைத்தலைவர் பரமையா, மாவட்ட பிரதிநிதி சண்முகப்பாண்டியன், செந்தூர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com