ஆலங்குடியில் 20 லிட்டர் சாராயம் பறிமுதல்

ஆலங்குடியில் 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலங்குடியில் 20 லிட்டர் சாராயம் பறிமுதல்
Published on

ஆலங்குடி ரெகுநாதபுரம், அழகன்விடுதி, பறையன்குளம் பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணமல்லி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த ஆலங்குடி அருகே மேட்டுப்பட்டி திருக்கட்டளையை சேர்ந்த ராஜ்குமார் மகன் சிவகுமார் (வயது 23) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து போலீசார் சிவகுமாரை கறம்பக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரேவதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com