தமிழ்நாட்டில் 20 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று 626 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் 20 பேருக்கு கொரோனா
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 626 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில், சென்னை மாவட்டத்தில் 10 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 5 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில் 2 பேருக்கும், செங்கல்பட்டு, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவடங்களில் தலா ஒருவருக்கும் என 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 187 ஆக உள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com