தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
Published on

சாணார்பட்டி அருகே உள்ள ராகலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர், 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள் சாணார்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் சந்தோஷ் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகிளா விரைவு கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சந்தோசுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com