தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
Published on

நத்தத்தை சேர்ந்தவர் பாரதிகணேஷ் (வயது 21). கூலித்தொழிலாளி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர், 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதிகணேசை கைது செய்தனர்.

இந்த வழக்கு, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

அதில் குற்றம்சாட்டப்பட்ட பாரதி கணேசுக்கு இந்திய தண்டனை சட்டம் 363 பிரிவின் கீழ் (சிறுமியை கடத்துதல்) 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1,000 அபராதமும், 450 பிரிவின் கீழ் (அடைத்து வைத்தல்) 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1,000 அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com