தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு திண்டுக்கல் கோர்ட்டில் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
Published on

கொடைக்கானல் தாலுகா தாண்டிக்குடியை அடுத்த சுவாமிமலையை சேர்ந்தவர் விஜய் (வயது 43). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2022-ம் ஆண்டு 13 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது.

நீதிபதி கருணாநிதி வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் அமுதா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி கருணாநிதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட விஜய்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com