தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
Published on

ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பட்டத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் குணா (வயது 22). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2021-ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் தரப்பில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, குணாவை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது.

நீதிபதி கருணாநிதி வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் அமுதா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட குணாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com