வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

பிளஸ்-1 மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
Published on

விருவீடு அருகே உள்ள அச்சணம்பட்டியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 29). பட்டதாரி. இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-1 படித்து கொண்டிருந்த ஒரு மாணவியை கடத்தி சென்று விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தரப்பில் விருவீடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிரசாத், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை ஊட்டிக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து விருவீடு போலீசார் ஊட்டிக்கு சென்று மாணவியை மீட்டு வந்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.

20 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதால், நீதிபதி சரண் நேற்று தீர்ப்பளித்தார். அதில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 363-ன்படி 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், போக்சோ சட்டம் 5 (எல்) மற்றும் 5 (ஜ) ஆகிய 2 பிரிவுகளுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com