

சென்னை,
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில், பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் 32-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "200 ஆண்டுகளுக்கு முன் வட இந்திய மற்றும் தென் இந்திய மக்கள் இடையேயான இடப்பெயர்வு இயல்பாக இருந்தது. அந்நியர்களின் படையெடுப்பிற்கு பிறகு, இந்த இடப்பெயர்வு தடுத்து நிறுத்தப்பட்டது. இடப்பெயர்வு நன்றாக இருந்தபோது, நாட்டின் பொருளாதாரமும் நன்றாக இருந்தது" என்று தெரிவித்தார்.