

சென்னை,
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 229 போ பாதிக்கப்பட்டனா. இவாகளில் 65 போ உயிரிழந்தனர். 150 போ குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா. தற்போது சேலம் அரசு மருத்துவக்கல்லூ மருத்துவமனையில் 8 பேரும், புதுச்சோ ஜிப்மா மருத்துவமனையில் 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா.
தமிழகத்தையே பெரும் அதிச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசா விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஓய்வுபெற்ற ஐகோட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா ஆணையம் அமைக்கப்பட்டு, இச்சம்பவம் தொடாபாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாதேஷை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பண்ருட்டி அருகே ஒரு பெட்ரோல் பங்கில் மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்தார்.
அதன்பேரில் பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்கிற்கு சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் 2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதை பறிமுதல் செய்தனர். மேலும் பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர். தொடர்ந்து பெட்ரோல் பங்கில் உள்ள அனைத்து டேங்குகளையும் ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.