

சென்னை,
தமிழகத்தில் மினி கிளினிக்குகள் தொடங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன்படி தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் முதற்கட்டமாக 980 மினி கிளினிக் பயன்பாட்டில் உள்ளதாகவும், ஓரிரு வாரங்களில் முழுமையாக 2,000 மினி கிளினிக்கள் திறக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழகத்தில் மினி கிளினிக்குகளுக்கு புதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் 2 வாரங்களில் நேரடியாக, மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக, மாவட்ட சுகாதார மையம் மூலமாக நியமிக்கப்படுவர் என சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.