அரவைக்காக 2,000 டன் நெல்

பேரளத்தில் இருந்து சென்னை கொருக்குப்பேட்டைக்கு அரவைக்காக 2,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
அரவைக்காக 2,000 டன் நெல்
Published on

நன்னிலம்:

பேரளத்தில் இருந்து சென்னை கொருக்குப்பேட்டைக்கு 2,000 டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருவாரூர், குடவாசல், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய பகுதிகளில் திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் பேரளம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரியில் இருந்து நெல் மூட்டைகளை ரெயிலின் 42 வேகன்களில் ஏற்றினர். இதை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில்சென்னை கொருக்குப்பேட்டைக்கு புறப்பட்டு சென்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com