

நீடாமங்கலம்:
நீடாமங்கலத்தில் இருந்து ராணிப்பேட்டைக்கு அரவைக்காக 2,000 டன் பொதுரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மற்றும் மூவாநல்லூர், அசேஷம், தெற்குநத்தம், எடையர்நத்தம், நெடுவாக்கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் 157 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரியில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதனை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் சென்னை ராணிப்பேட்டைக்கு புறப்பட்டு சென்றது.