அரவைக்காக 2000 டன் நெல்

நீடாமங்கலத்தில் இருந்து கொருக்குப்பேட்டைக்கு அரவைக்காக 2,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
அரவைக்காக 2000 டன் நெல்
Published on

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் இருந்து கொருக்குப்பேட்டைக்கு அரவைக்காக 2,000 டன் பொதுரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் அசேஷம், தெற்குநத்தம், இடையர்நத்தம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் 153 லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் லாரியில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 41 பெட்டிகளில் ஏற்றினர்.இதனை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் கொருக்குப்பேட்டைக்கு புறப்பட்டு சென்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com