2014 மற்றும் 2019 தமிழகத்தின் தனித்துவமான தேர்தல் முடிவுகள்

தற்போது திமுக 35 இடங்களில் முன்னணியில் உள்ளது. அதிமுக கூட்டணி 3 இடங்களில் முன்னணியில் உள்ளது.
2014 மற்றும் 2019 தமிழகத்தின் தனித்துவமான தேர்தல் முடிவுகள்
Published on

சென்னை

தமிழகத்தில் கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க 37 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது திமுக 35 இடங்களில் முன்னணியில் உள்ளது. அதிமுக கூட்டணி 3 இடங்களில் முன்னணியில் உள்ளது.

சென்னையில் தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேரும் முன்னிலையில் உள்ளனர்.

வடசென்னையில் டாக்டர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் உள்ளார். பா.ம.க. வேட்பாளர் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருந்து வந்தார்.

மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சாம்பால் குறைந்த ஓட்டுகள் வாங்கி பின் தங்கினார்.

தென்சென்னை தொகுதியில் ஆரம்பத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் முன்னிலை வகித்தார். பின்னர் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவரை முந்தினார்.

தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலையில் உள்ளார்.

தமிழக முன்னணி நிலவரம் வருமாறு:-

திமுக 18

சிபிஐ 2

முஸ்லீம் லீக் 1

காங்கிரஸ்-8

கொங்குநாடு -1

விடுதலை சிறுத்தைகள் -1

தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க.விற்கு சபாநாயகருடன் சேர்த்து 114; தி.மு.க.விற்கு 88; அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு எட்டு, முஸ்லிம் லீக்கிற்கு ஒன்று, ஒரு சுயேச்சை என 212 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 22 தொகுதிகள் காலியாக இருந்தன. இந்த 22 தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, திமுக 12 தொகுதிகளிலும் மற்றும் அதிமுக 10 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com